முகப்பு /செய்தி /இந்தியா / நேருக்கு நேர் மோதிய ரயில்கள்...! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்...! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

  • Last Updated :

கச்சிகுடா ரயில் நிலையத்தில் விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில் நேருக்கு நேர் மோதியதில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் குர்னூல் - செகுந்தராபாத் இண்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை 10.30 மணிக்கு பிளாட்பாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிரே அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.

ரயில் நிலையத்தின் உள்ளே என்பதால், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயங்கியுள்ளன. இதனால், பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கொடுக்கும் முன்னரே, மின்சார ரயில், நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளதாகவும், தண்டவாளம் மாற்றப்படாததால் விபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இயங்கும் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டது.

ரயில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

விபத்து காரணமாக பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also See...

First published: