ஹோம் /நியூஸ் /இந்தியா /

பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயன்ற கடத்தல் கும்பல்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயன்ற கடத்தல் கும்பல்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

காருக்குள் புகுந்து சுஷ்மாவின் கண்ணில் ஸ்பிரேவை தெளிவித்துவிட்டு அவரை கடத்த முயன்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Haryana, India

ஹரியானாவில் காரில் தனியாக அமர்ந்திருந்த பெண்மணியை கடத்த முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. யமுனா நகரில் உள்ள சாஸ்திரி காலனியை சேர்ந்த சுஷ்மா என்பவர் வழக்கம் போல் நேற்று காலை உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரில் வந்து அமர்ந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் காருக்குள் புகுந்து சுஷ்மாவின் கண்ணில் ஸ்பிரேவை தெளிவித்துவிட்டு அவரை கடத்த முயன்றனர்.

கார் கதவு திறந்திருந்த நிலையில், சுஷ்மாவின் கூச்சல் சப்தம் கேட்டு அக்கம்பத்தினர் ஓடி வந்தனர். இதனைக் கண்ட கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பியோட முயன்றது. அப்போது பொதுமக்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

First published:

Tags: Haryana, Kidnap