ஹோம் /நியூஸ் /இந்தியா /

‘சிபிஎஸ்இ-யிலும் புதிய கல்விக்கொள்கை; அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்’- சிபிஎஸ்இ தலைவர் தகவல்!

‘சிபிஎஸ்இ-யிலும் புதிய கல்விக்கொள்கை; அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்’- சிபிஎஸ்இ தலைவர் தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

புதிய கல்விக்கொள்கையின் படி, 2035 ஆம் ஆண்டில் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த திட்ட

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  மாணவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய கல்விக்கொள்கை என்பது கடந்த 1968ல் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் படி பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில் தான் கஸ்தூரி ரங்கன் குழு வெளியிட்ட அறிக்கையின்படி 2020ல் புதிய கல்விக்கொள்கை முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

  இந்த புதிய கல்விக்கொள்கையை பல பள்ளிகள் நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிபிஎஸ்இ-யிலும் புதிய கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக இதன் தலைவர் நிதி சிப்பரின் தெரிவித்துள்ளார். இதன்படி, 10 +2 என்ற பள்ளிப்பாடமுறை மாற்றப்பட்டு 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 வயது 11 வயது, 11 முதல் 14 வயது மற்றும் 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காக பாடமுறை மாற்றப்படவுள்ளது.

  உஷார்.! சளி, காய்ச்சல் மருந்துகளில் 50 போலிகள்.. இதுதான் முழு லிஸ்ட்!

  இந்தியாவில் உள்ள அனைத்து CBSE வாரியத்துடன் இணைந்த பள்ளிகளும் தற்போதைய 10+2 அமைப்பிலிருந்து முன்மொழியப்பட்ட 5+3+3+4 ஒன்றுக்கு இடம்பெயர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி வாரியம் விரைவில் ஒரு உத்தரவை வெளியிடும் எனவும் சிபிஎஸ்இ தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் கிராமப்புற மற்றும் நகரப்புற கல்வியோடு இணைந்த தொழிற்பயிற்சியை இதன் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுவதோடு பள்ளிப் பதிவேடு, ஆசிரியர் பதிவேடு மற்றும் மாணவர் பதிவேடு ஆகியவை பள்ளிக் கல்வியின் பல நிலைகளில் இந்த வளங்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  குறிப்பாக 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை முறையானக் கல்வியில் சேர்ப்பது தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சமாகும் என்று சிபிஎஸ்இ தலைவர் கூறினார். பல சிபிஎஸ்இ பள்ளிகள், ப்ரீ நர்சரிகள் மற்றும் ஆயத்தப் பள்ளிகள் மூலம், ஏற்கனவே இளைய குழந்தைகளின் கல்வியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், அதேபோல பாடத்திட்டத்துடன் எழுத்து, பேச்சு, ஒவியம், நடனம் போன்ற பிற கூடுதல் பாடத்திட்டங்களும் கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அரை நிர்வாணம்.. காதலியை 5 துண்டாக வெட்டிய கொடூர காதலன்.. சுட்டுப்பிடித்த போலீஸ்!

  புதிய கல்விக்கொள்கையின் படி, 2035 ஆம் ஆண்டில் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரையில் தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: CBSE, Education