ஹோம் /நியூஸ் /இந்தியா /

கடும் எதிர்ப்பு எதிரொலி: சி.பி.எஸ்.இ வினாத்தாளில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கம்

கடும் எதிர்ப்பு எதிரொலி: சி.பி.எஸ்.இ வினாத்தாளில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 11ம் தேதி நடைபெற்ற 10ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண் வெறுப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் ஒரு வினாவாக கேட்கப்பட்டிருந்தது கண்டனத்தை பெற்றுள்ளது. அந்த வினாவில் பிற்போக்கான பெண் வெறுப்பு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் இடம்பெற்றது அனைவரது கண்டனத்தையும் பெற்றுள்ளது.

    அந்த சர்ச்சைக்குரிய கேள்வி ஒரு பெரிய சொற்றொடராக இடம்பெற்றிருந்தது. அந்த வாக்கியத்தில், மனைவிகள் தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள், அதுவே குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுக்கமின்மைக்கு முக்கியக் காரணம், மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது. பெண் விடுதலை குழந்தைகளிடையே ஒழுக்கமின்மைக்கு வழிவகுத்தது, சமூக பிரச்சினைகளுக்கு பெண்களின் விடுதலை தான் காரணம், மேலும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.

    அந்த கேள்விக்கான விடைகளுள் ஒன்றாக, எழுத்தாளர் ஒரு ஆண் பேரினவாத நபர் என்று கொடுக்கப்பட்டிருந்தது. இன்னொரு விடையாக எழுத்தாளர் வாழ்க்கையை இலகுவாக அணுகுகிறார் என்ற விடை கொடுக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் இவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுகொள்ளப்பட்டிருந்தனர்.

    இத்தகைய கருத்துக்கள் பள்ளி மாணவர்களின் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்தது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியது.

    இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கான முழு மதிப்பெண் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்திருக்கிறது.

    Also read: சி.பி.எஸ்.இ வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கேள்வி.. டி.டி.வி.தினகரன் கண்டனம்

    Published by:Esakki Raja
    First published:

    Tags: CBSE