முகப்பு /செய்தி /இந்தியா / ஒரு நாளில் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு மாணவர் சேமிக்க வேண்டும் - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புது உத்தரவு

ஒரு நாளில் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு மாணவர் சேமிக்க வேண்டும் - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புது உத்தரவு

தண்ணீர் சேமிப்பு

தண்ணீர் சேமிப்பு

மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பள்ளிகளும் மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இயக்குநரகம் கோரிக்கை வைத்துள்ளது.

  • Last Updated :

மாணவர் ஒருவர் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீரையாவது சேமிப்பதை பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும் என சிபிஎஸ்இ இயக்குநரகம் பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பள்ளிகளும் மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இயக்குநரகம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக சிறப்பு சூழல் குழுக்கள் அமைக்கப்பட்டு வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

“ஸ்திரமான சுற்றுச்சூழலை அமைக்க மாணவர்கள் சூழலியல் குழுக்கள் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமல்லாது பருவநிலை மாற்றம், தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றைக் குறித்தும் இனி கற்கத் தொடங்குவார்கள். தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை சுற்றுச்சூழல் கல்வி ஊக்குவிக்கப்படும். 2029-20 கல்வியாண்டில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் இதை நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும்” என்கிறார் சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால்.

மேலும் அவர் கூறுகையில், “வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி ஒரு நாளில் மாணவர் ஒருவர் 1 லிட்டர் தண்ணீரை சேமிக்க வலியுறுத்துவோம். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரையில் இத்திட்டத்தை அறிவுறுத்துகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லா பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள் ஆகும்” என்றார்.

top videos
    First published:

    Tags: Mission Paani, Save Water