ஹோம் /நியூஸ் /இந்தியா /

6-ம் வகுப்பு புத்தகத்தில் வர்ணாஸ்ரமம் இடம்பெற்றதா? விளக்கமளித்த சிபிஎஸ்இ

6-ம் வகுப்பு புத்தகத்தில் வர்ணாஸ்ரமம் இடம்பெற்றதா? விளக்கமளித்த சிபிஎஸ்இ

வர்ணாஸ்ரமம் பற்றிய தலைப்புகள் கொண்ட 6-ம் வகுப்பு வரலாற்று பாட புத்தகம் சிபிஎஸ்இ-ஆல் வெளியிடப்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

வர்ணாஸ்ரமம் பற்றிய தலைப்புகள் கொண்ட 6-ம் வகுப்பு வரலாற்று பாட புத்தகம் சிபிஎஸ்இ-ஆல் வெளியிடப்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

வர்ணாஸ்ரமம் பற்றிய தலைப்புகள் கொண்ட 6-ம் வகுப்பு வரலாற்று பாட புத்தகம் சிபிஎஸ்இ-ஆல் வெளியிடப்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளால் கற்பிக்கப்படும் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘வர்ணாஸ்ரமம்’ குறித்து சித்தரித்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து, வரலாற்றுப் பாட புத்தகங்களை சிபிஎஸ்இ வெளியிடுவதில்லை, ஆகவே இந்த விவகாரத்திற்கும் சிபிஎஸ்இ-க்கும் தொடர்பில்லை என அந்த வாரியம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான விடுதலைமுதன்முதலில் பாட புத்தகத்தின் படத்தை வெளியிட்டு ‘மனு தர்மம் அல்லது வர்ணாஸ்ரம தர்மம் எங்கே என்று கேள்வி எழுப்புவோரின் கவனத்திற்கு இதை நான் கொண்டு வந்தேன்’ என்று விசிக தலைவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டார்.

சாதிகள் பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பதாக மத்திய அரசை கடுமையாக சாடிய அவர், இந்துக்கள் நான்கு வெவ்வேறு துணைக்குழுக்களில் மட்டுமே வருகிறார்கள் என்றும் கூறினார். எஸ்சி, எஸ்டி சமூகப் பிரிவினர் இந்நான்கு வகைகளைச் சாராதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பரபரப்பாக பரவியதன் காரணமாக, பல அரசியல் கட்சிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கின. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், பாட புத்தகத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் ‘வர்ண அமைப்பு’ என்ற பாடத்திற்கு எதிராக கண்டனங்களை எழுப்பியது. சாதி அமைப்பு குறித்த பாடங்கள் பாட புத்தகங்களில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ-யை அக்கட்சி வலியுறுத்தியிருந்தது.

இந்த விவகாரம் குறித்த ட்வீட் ஒன்றில், சிபிஎஸ்இ தனது பதிலை அளித்துள்ளது, ‘வர்ணாஸ்ரமம் பற்றிய தலைப்புகள் கொண்ட 6-ம் வகுப்பு வரலாற்று பாட புத்தகம் சிபிஎஸ்இ-ஆல் வெளியிடப்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது. இதில் உண்மையில்லை. சிபிஎஸ்இ, வரலாற்று பாட புத்தகங்களை வெளியிடுவதில்லை, எனவே இந்த விவகாரம் சிபிஎஸ்இ உடன் தொடர்புடையது அல்ல’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையே, வைரலான அந்த பாட புத்தகத்தில், பிராமணர்களை முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களையும் தரவரிசைப்படுத்தும் ‘மனித பிரமிட்டை’ குறிக்கும் படம் இடம்பெற்றுள்ளது. சாதியின் அடிப்படையில் மனிதர்களை வரிசைப்படுத்துவது அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. வைரலான படத்தின் படி, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட XSEED கல்வி என்ற தனியார் பதிப்பகத்தால் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Archana R
First published:

Tags: CBSE, Makkal Needhi Maiam, VCK