தேர்வு அறையில் முகக்கவசம் அணியலாம், கிருமிநாசினி கொண்டு வரலாம் - சி.பி.எஸ்.இ

தேர்வு அறையில் முகக்கவசம் அணியலாம், கிருமிநாசினி கொண்டு வரலாம் - சி.பி.எஸ்.இ
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பு குறித்து நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு எழுதும் மாணவா்கள், தேர்வு அறையில் முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலா் அமித்கரே அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை, சிபிஎஸ்இ நிா்வாகம் ஆகியோருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது. நோய் பரவும் முறை, கடைப்பிடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது அவசியமாகும்.

அனைத்து பள்ளிகளிலும் மாணவா்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாணவா்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கைகளைக் கழுவ வேண்டும். இருமல், தும்மல், சளி போன்ற பாதிப்புகள் இருக்கும் மாணவா்கள் கைக்குட்டைகள், டிஸ்யூ பேப்பா் ஆகியவற்றை பயன்படுத்துவது அவசியம்.


கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்து மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ) மாணவா்களின் பெற்றோா் கேட்டு வருகின்றனா். இதை கருத்தில் கொண்டு தேர்வு எழுதும் மாணவா்கள் தேர்வறைக்கு கைகளை தூய்மையாக்கும் கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை கொண்டுவர அனுமதி வழங்க வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading