Home /News /national /

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் கைது செய்யப்பட வாய்ப்பு! சி.பி.ஐ சம்மன்

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் கைது செய்யப்பட வாய்ப்பு! சி.பி.ஐ சம்மன்

ராஜீவ் குமார்

ராஜீவ் குமார்

கைது செய்வதிலிருந்து தடைவிதிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராஜீவ் குமார். ராஜீவ் குமாரை மே 24-ம் தேதிவரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

  • News18
  • Last Updated :
    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. அப்போது, அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது. அந்த வழக்கை, சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரித்துவருகிறது.

    சி.பி.ஐ விசாரணையில், பணமுறைகேடு விவகாரம் தொடர்பான ஆவணங்களை அழித்தார் என்று குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக, அவரைக் கைது செய்வதற்கு சி.பி.ஐ முயற்சி செய்தது. ஆனால், கைது செய்வதிலிருந்து தடைவிதிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராஜீவ் குமார். ராஜீவ் குமாரை மே 24-ம் தேதிவரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

    இந்தநிலையில், கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் நிறைவடைந்தநிலையில், நாளை விசாரணைக்கு வரவேண்டும் என்று ராஜீவ் குமாருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. அப்போது, அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா காவல்ஆணையராக ராஜீவ் குமார் இருந்தபோது, அவரைக் கைது செய்ய சி.பி.ஐ முயற்சி செய்தது. அப்போதுதான் சி.பி.ஐ அதிகாரிகளை மாநில காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு மம்தா பானர்ஜி கைது செய்தது தேசிய அளவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Kolkata

    அடுத்த செய்தி