Home /News /national /

சிபிஐ சோதனையில் தொழிலதிபரின் ஹெலிகாப்டர் பறிமுதல்… வங்கிகளுக்கு ரூ.34,615 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் நடவடிக்கை

சிபிஐ சோதனையில் தொழிலதிபரின் ஹெலிகாப்டர் பறிமுதல்… வங்கிகளுக்கு ரூ.34,615 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் நடவடிக்கை

ஹெலிகாப்டர் பறிமுதல்

ஹெலிகாப்டர் பறிமுதல்

AgustaWestland chopper: ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான  அவினாஷ் போஸ்லே என்பவருக்கு  சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அவருக்கு சொந்தமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வகை ஹெலிகாப்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

மேலும் படிக்கவும் ...
    முறைகேடு மூலம் வங்கிகளுக்கு  ரூ.34,615 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் அவினாஷ் போன்ஸ்லே என்பவருக்கு சொந்தமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (DHFL) 17 வங்கிகள் கூட்டமைப்பில் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாகவும் இதனால் வங்கிகளுக்கு 34.615 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீபக் வதாவன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    குற்றம் சாட்டப்பட்ட கபில் வாத்வானும் மற்றவர்களும் கிரிமினல் சதித்திட்டத்தை பின்பற்றி  கூட்டமைப்பு வங்கிகளை ரூ.42,871 கோடி அளவுக்கு பெரிய கடன்களை அனுமதிக்க தூண்டியுள்ளனர். இவ்வாறு கடனாக பெற்ற பணத்தின் பெரும்பகுதியை தவறாக பயன்படுத்தியுள்ளனர். மேலும், கடன் தொகைக்கான தவணையை முறையாக கட்டாமல் ரூ.34,615 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர் என சிபிஐ தனது எஃப்.ஐ.ஆர்-இல் குறிப்பிட்டுள்ளது.

    இதையும் படிங்க: உயிரிழந்த குழந்தைகளுக்கு 30 வயதில் திருமணம்! இல்லாத ஜோடிக்கு ஊர் கூடி கல்யாணம்- ஆச்சரியமளிக்கும் ஊர் வழக்கம்!

    இதனிடையே, இந்த முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான  அவினாஷ் போன்ஸ்லே என்பவருக்கு  சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அவருக்கு சொந்தமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வகை ஹெலிகாப்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: AgustaWestland, CBI

    அடுத்த செய்தி