Home /News /national /

டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா இல்லத்தில் சிபிஐ சோதனை

டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா இல்லத்தில் சிபிஐ சோதனை

மனிஷ் சிசோடியா

மனிஷ் சிசோடியா

மது கொள்கை அமல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு பெரும் ஊழல் செய்ததாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    டெல்லியின் துணை முதலமைச்சரான மனிஷ் சிசோடியாவின் இல்லம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுக்கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அரசு 2021-22 புதிய மதுக் கொள்கையை டெல்லி அரசு கொண்டுவந்தது. அதன்படி, மதுபானங்களை சில்லறை விற்னை செய்து கொள்ளவும், வீட்டிற்கே டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கொள்கை இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பின்னர் இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசே வாபஸ் பெற்றது.

    இந்த கொள்கை அமல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு பெரும் ஊழல் செய்ததாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். மதுபான நிறுவனங்கள், பார்களுக்கு வழங்கிய டென்டரில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.


    குறிப்பாக, வெளிநாட்டு ரக மதுபானங்களுக்கு அளிக்கப்படும் இறக்குமதி வரியில் மோசடி செய்து நிறுவனங்கள் பெரும் லாபம் சம்பாதிக்கவும் அரசுக்கு வருவாய் இழப்பு செய்யும் விதமாக செயல்பட்ட புகாரில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி பாதுகாப்பில் இந்தியாவின் முதோல் ரக நாய்கள் சேர்ப்பு..!

    சிபிஐ சோதனை தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், "இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இது போன்ற பல விதமான சோதனைகளை தாண்டி ஆம் ஆத்மி மக்கள் நலன் என்ற லட்சியத்தில் பயணித்து வருகிறது. இந்த சோதனையிலும் சிபிஐக்கு ஒன்றும் கிடைக்காது" என்றார்.  மேலும், மனிஷ் சிசோடியா தான் இந்தியா வரலாற்றின் சிறந்த கல்வி அமைச்சர் எனவும் டெல்லி மாடல் கல்வி உலக அரங்கில் போற்றிப் புகழப்படுகிறது என தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தியை பகிர்ந்து பாராட்டியுள்ளார். அதேவேளை, இந்த ஊழல் புகாரில் சிக்கி மனிஷ் சிசோடியா சிறை செல்வது உறுதி என பாஜக ஐடி விங்க் நிர்வாகி அமித் மாளவியா கருத்து தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Aam Aadmi Party, CBI raid

    அடுத்த செய்தி