சுவர் ஏறி குதிப்பது சிபிஐக்கு புதிதல்ல... அன்று தயாநிதிமாறன்.. இன்று ப. சிதம்பரம்..

சுவர் ஏறி குதிப்பது சிபிஐக்கு புதிதல்ல... அன்று தயாநிதிமாறன்.. இன்று ப. சிதம்பரம்..
  • Share this:
ப.சிதம்பரத்தின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள், அவரை இரவு நேரத்தில் கைது செய்து அழைத்துச்சென்ற விதம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

தடைதாண்டும் போட்டியைப்போல், சிபிஐ அதிகாரிகள் 6 அடி உயரமுள்ள சுவரை தாண்டும் இக்காட்சிகள் டெல்லி ப.சிதம்பரத்தின் வீட்டில் பதிவு செய்யப்பட்டவை. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது டெல்லியில் அதிகார மையமாக வலம்வந்த ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் வழக்கில் கைது செய்ய டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் செல்ல முயற்சித்தனர். ஆனால், அவரது வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அதனால், வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், சுவர் ஏறி குதித்துச் சென்றனர்.

சிபிஐ அதிகாரிகளுக்கு இது முதல் முறை அல்ல.

2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதிமாறன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிபிஐயின் ஆய்வு முறைகள் பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோல், 2011 ஆம் ஆண்டில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் வழக்கில் சிக்கிய சுரேஷ் கல்மாடி வீட்டிலும் சுவர் ஏறி சோதனை செய்த சிபிஐ அதிகாரிகள், மேல்நிலை நீர்த்தொட்டியில் பணம், ஆவணம் பதுக்கப்பட்டதா என ஆய்வு மேற்கொண்டனர்.

இனிமேல், சிபிஐ அதிகாரிகளுக்கான பயிற்சியில் சுவர் ஏறி குதிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்று நெட்டிசன்கள் கிண்டலாக விமர்சித்துள்ளனர்.

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்