Home /News /national /

குட்கா வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் கூண்டோடு பணியிடமாற்றம்

குட்கா வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் கூண்டோடு பணியிடமாற்றம்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ( கோப்புப் படம்)

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ( கோப்புப் படம்)

  • Last Updated :
    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீதான குட்கா லஞ்ச வழக்கை விசாரித்து வந்த விசாரணை குழு தலைவர் டிஐஜி மணிஷ்குமார் சின்ஹா உட்பட 6 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சிபிஐ இயக்குநர்கள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் கூடுதல் செயலர் லோக் ரஞ்சன் வெளியிட்டுள்ளார். லோக் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணை இயக்குநராக பணியாற்றி வரும் நாகேஸ்வர் ராவ், சிபிஐ இயக்குரின் பொறுப்புகளை ஏற்பார் எனவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் குட்கா லஞ்ச வழக்கில் அரசு அதிகாரிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்குழு கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை தொய்வடைந்துள்ளது. தற்போது சிபிஐயின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நாகேஸ்வர ராவ் தலைமையின் கீழ் விசாரணைக் குழு அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also See:

    Published by:Saroja
    First published:

    Tags: Alok Verma, CBI, Gutkha Scam, Rakesh Asthana

    அடுத்த செய்தி