ஹோம் /நியூஸ் /இந்தியா /

லாலுவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பம்

லாலுவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பம்

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத்

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை வழங்கிய சிபிஐ நீதிபதி , தனது குடும்பத்துடன் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அரசு கருவூலத்தில் இருந்து பண மோசடி செய்ததாக, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் , பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த 6-ஆம் தேதியன்று லாலுவுக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் மூன்றரை ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் சிபிஐ நீதிபதி ஷிவ்பால் சிங், தனது குடும்பத்துடன் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அவர்கள் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக ராஞ்சி காவல்துறை தெரிவித்துள்ளது.

First published: