Home /News /national /

சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்பாக மத்திய அரசு முக்கிய அவசர சட்டம்!

சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்பாக மத்திய அரசு முக்கிய அவசர சட்டம்!

பதவி நீட்டிப்பு

பதவி நீட்டிப்பு

அரிதான, அசாதாரண சூழல்கள் தவிர்த்து  பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. தற்போது, சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அவரச சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    சிபிஐ இயக்குநர் மற்றும் அமலாக்கதுறை இயக்குநரின் பதவிக்காலம் தற்போது 2 ஆண்டுகளாக உள்ளது. இதனை 5 ஆண்டுகளாக நீட்டிக்கும் அவசர சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    ”நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் திருப்திகரமாக இருப்பதால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக  அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை தற்போதைய ED இயக்குனர் சஞ்சய் மிஸ்ரா மற்றும் சிபிஐ இயக்குனர் சுபோத் ஜெய்ஸ்வால் ஆகியோரின் பதவி நீட்டிப்பு வழிவகுக்கிறது. சஞ்சய் மிஸ்ராவின் 2 ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

    இதையும் படிங்க: கோயில் உண்டியலில் பணத்தை திருடும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்த திருடன் - சிசிடிவி சுவாரஸ்யம்


    சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் ஏற்கனவே ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரிதான மற்றும் அசாதாரண சூழல்கள் தவிர்த்து  பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

    மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் சூழலில் சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க: என் தாய் மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன் - அமித்ஷா

    Published by:Murugesh M
    First published:

    Tags: CBI, Enforcement Directorate

    அடுத்த செய்தி