உன்னாவ் பெண் சென்ற கார் மீது லாரி மோதிய வழக்கு! எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் விடுவிப்பு

பல தடயவியல் ஆய்வுகளை சி.பி.ஐ மேற்கொண்டது. விசாரணையின்போது, விபத்து ஏற்படுவது போன்ற மாதிரி சம்பங்களும் செய்து பார்க்கப்பட்டது.

உன்னாவ் பெண் சென்ற கார் மீது லாரி மோதிய வழக்கு! எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் விடுவிப்பு
குல்தீப் சிங் செங்கார்
  • News18
  • Last Updated: October 12, 2019, 4:12 PM IST
  • Share this:
உன்னாவ் பெண் சென்ற காரின் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கிலிருந்து எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்(பாலியல் வன்கொடுமை நடைபெற்றபோது அவருக்கு வயது 17. அப்போது அவர் சிறுமி). அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் தலைப்புச் செய்தியானது.

அதுகுறித்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு(2017) உன்னோ தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடய சகோதரர் உள்ளிட்ட சிலர் என்னைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்’ என்று புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்து சி.பி.ஐ, பெண்ணை, எம்.எல்.ஏ அவரது சகோதரர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.


இந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் பாதிக்கப்பட்ட பெண், அவருடயை அம்மா, அவருடைய வழக்கறிஞர், பெண்ணின் உறவினப் பெண்கள் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் சென்ற காரின் மீது மோதியது. அந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் இருவர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் சி.பி.ஐ விசாரணை செய்தது.

இதுதொடர்பாக, இரண்டு மாத காலம் விசாரணை நடத்திய சி.பி.ஐ நேற்று குற்றப்பத்திரிக்கயைத் தாக்கல் செய்தனர். அதில், எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை.

அந்த அறிக்கையில், ‘இந்த விபத்து திட்டமிடப்பட்டு நடைபெறவில்லை. லாரி ஓட்டுநர் வேகமாக ஓட்டியதும் அலட்சியமாக ஓட்டியதுமே இந்த விபத்துக்கு காரணம். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் அருண் குமார் பால் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ, 338, 279 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்காரின் மீது கொலை செய்வதாக மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.அந்தச் சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணை குறித்து தெரிவித்த சி.பி.ஐ வட்டாரங்கள், ‘பல தடயவியல் ஆய்வுகளை சி.பி.ஐ மேற்கொண்டது. விசாரணையின்போது, விபத்து ஏற்படுவது போன்ற மாதிரி சம்பங்களும் செய்து பார்க்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see:

First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading