சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம்

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான புகார் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

Web Desk | news18
Updated: January 10, 2019, 9:15 PM IST
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம்
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா
Web Desk | news18
Updated: January 10, 2019, 9:15 PM IST
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்ட நிலையில், இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து வர்மா தொடர்ந்த வழக்கில், அவரை மீண்டும் பணியமர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர். அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கி, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல்படை டைரக்டர் ஜென்ரலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், புதிய சிபிஐ இயக்குநர் நியமிக்கும் வரை, இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான புகார் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

இறைச்சி வியாபாரி மொயின் குரோஷி மீதான புகாரை கைவிடுவதற்காக லஞ்சம் பெற்றதாக அஸ்தானா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி அஸ்தானா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...