பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

 சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 

Web Desk | news18
Updated: January 11, 2019, 11:22 PM IST
பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா
 சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 
Web Desk | news18
Updated: January 11, 2019, 11:22 PM IST
 சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்களை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.  இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அலோக் வர்மாவை மீண்டும் இயக்குனராக நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு கூடி அலோக் வர்மாவை  தீயணைப்புத்துறைக்கு இடமாற்றம் செய்தது. ஜனவரி 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியில் பணியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.

இதுபோல் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தன் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றமத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை  டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . மேலும் 10 வாரங்களுக்குள் வழக்கில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அலோக் வர்மா பிறப்பித்த பணியிட மாறுதல்களை தற்காலிக இயக்குனர் நாகேஸ்வர் ராவ் ரத்து செய்துள்ளார்.

 
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...