முகப்பு /செய்தி /இந்தியா / லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ விசாரணை..

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ விசாரணை..

லாலு யாதவ், ராப்ரி தேவி வீட்டில் சிபிஐ சோதனை

லாலு யாதவ், ராப்ரி தேவி வீட்டில் சிபிஐ சோதனை

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் நிறுவனரும், பீகாரின் முன்னாள் முதலமைச்சருமாக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவியும் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். 2004-2009 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ஒருவர் நிலம் வழங்கினால் அவருக்கு இந்திய ரயில்வேயில் அரசு வேலை தரப்படும் என ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக லாலு யாதவ், அவரது மனைவி ராபரி தேவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை டெல்லி ரோஸ் அவன்யூ கோர்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணையில் லாலு யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணைக்கு வருகை தந்துள்ளனர். வழக்கு தொடர்பாக ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்துவதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார். மனிஷ் சிசோடியா கைது நடவடிக்கையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை நேற்று எழுதினர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு.. சினிமா பாணி படுகொலை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

மத்திய ஏஜென்சிகளால் எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்த கடிதத்தில் லாலு பிரசாத் யாதவும் கையெழுத்து போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே லாலு யாதவ் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: CBI, Lalu Prasad Yadav