ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: முன்னாள் தலைவர் ஆனந்த் சுப்பிரமணியன் கைது!

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: முன்னாள் தலைவர் ஆனந்த் சுப்பிரமணியன் கைது!

NSE Issue | ஆனந்த் சுப்பிரமணியன் முறைகேடாக நெட்வொர்க் சர்வர்களின் அனுமதியை வழங்கியதாகவும் புகார் எழுந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில், அதன் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா பங்குச் சந்தை தொடர்பான மிக ரகசியமான தகவல்களை இமயமலை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இதனைதொடர்ந்து அவர் சிபிஐ விசாரணை வளையத்திலும் சிக்கினார். மேலும் தனது உறவினரான ஆனந்த் சுப்ரமணியனை தேசிய பங்குச் சந்தையின் செயலாக்க அதிகாரியாக நியமித்ததிலும் சித்ரா முறைகேடு செய்ததாக செபி தெரிவித்தது.

  மேலும் படிக்க: துளியும் பயமின்றி தனி ஆளாக ரஷ்ய ராணுவ வீரரை எதிர்த்து நின்ற உக்ரைன் பெண்!

  இதனிடையே பங்குச்சந்தையில் அதிகளவில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு, ஆனந்த் சுப்பிரமணியன் முறைகேடாக நெட்வொர்க் சர்வர்களின் அனுமதியை வழங்கியதாகவும் புகார் எழுந்தது.

  மேலும் அல்கோ எனப்படும் அதிவேக வர்த்தக தளத்திற்கான அனுமதியை சட்ட விரோதமாக சில இடைத்தரகர்களுக்கு ஆனந்த் சுப்பிரமணியன் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், ஆனந்த் சுப்பிரமணியத்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: CBI, NSE