சமீப காலமாகவே இந்தியாவில் Sextortion தொடர்பாக குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.தனிநபரின் நிர்வாண அல்லது அரைகுறையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நயந்து பேசியோ அல்லது அவருக்கு தெரியாமலோ பதிவு செய்து வைத்து, அதை இணையத்தில் லீக் செய்து விடுவோம் என்று பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் குற்றச் செயலே Sextortion எனப்படுகிறது.
இந்த குற்றத்திற்கு பலரும் பலிகெடாவாகிவரும் நிலையில், டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடி அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரையே இந்த வலையில் வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை பணிபுரியும் பேராசிரியர் ஒருவருக்கும் டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த இளம்பெண்ணிடம் அமெரிக்க பேராசிரியர் நெருக்கி பேசத் தொடங்கிய நிலையில், அது ஒரு கட்டத்தில் பாலியல் சார்ந்த ஆசை வார்த்தைகளை பேராசிரியரும் பெண்ணும் பேச தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அந்த இளம் பெண் பேராசிரியரிடம் அவரின் நிர்வாண வீடியோக்களை அனுப்புமாறு கூறியுள்ளார். ஆசை மயக்கத்தில் அந்த பேராசிரியரும் வீடியோக்களை எடுத்து அனுப்பிய பின்னர் தான், அந்த பெண் தனது உண்மை முகத்தை காட்டத் தொடங்கியுள்ளார். இந்த இளம்பெண் தனது ஆண் நண்பர் ராகுல் என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டு தான் பேராசிரியரை வலையில் வீழ்த்தியுள்ளார்.
தங்களுக்கு தேவையான வீடியோக்கள் புகைப்படங்கள் கிடைத்த பின்னர், ராகுல் அதை வைத்து பேராசிரியை பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பேபால் மூலமாக ஆன்லைனில் பணம் அனுப்ப வேண்டும், இல்லை என்றால் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் கூறி வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இவ்வாறு மிரட்டிய ரூ.39 லட்சம் மதிப்பிலான பணத்தை பறித்துள்ளார். மேலும்,எனக்கு ஐபோன் வேண்டும், ஹெட்போன் வேண்டும் என பரிசுப்பொருள்களை கேட்டும் மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து பேஸ்புக்கில் காதல் வலை வீசிய பெண்! ’அழகிய’ காதலிக்காக, 40 லட்சம் ஏமாந்த அப்பாவி இளைஞர்.. !!
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அமெரிக்க பேராசிரியர் அந்நாட்டின் விசாரணை அமைப்பான FBI இடம் புகார் அளிக்க அவர்கள் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இடம் தொடர்பு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் சிபிஐ டெல்லி அசோலா என்ற பகுதியில் இருந்த ராகுலை கைது செய்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள ராகுலின் காதலியை தேடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBI, Cheating, Cyber crime, Delhi, Online Frauds