• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ”தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா தரவேண்டும்”

”தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா தரவேண்டும்”

காவிரி (கோப்புப்படம்)

காவிரி (கோப்புப்படம்)

கர்நாடக அணை நீர்பிடிப்புப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உரிய அளவில் பெய்தால் இரு மாநில விவசாயிகளுக்கும் நிம்மதி கிடைக்கும்.

  • Last Updated :
  • Share this:
காவிரியில் இருந்து ஜூன், ஜூலை மாதங்களுக்கு தமிழகத்துக்கு தரவேண்டிய உரிய. நீரை கர்நாடகா திறந்துவிடவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 

மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் டெல்லியில் ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஜூன் மாதம் தரவேண்டிய 9 புள்ளி19 டிஎம்சி நீரை முழுமையாக தரவேண்டும் என்றும் ஜூலை மாதம் தரவேண்டிய 3 புள்ளி 24 டிஎம்சி நீரையும் கர்நாடகா தரவேண்டுமென தமிழகம் கேட்டுக் கொண்டது.

மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால் அதை இந்த கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி, காவிரிக்கு குறுக்கே அணை, நீர்த்தேக்கம் கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களூருவில் உள்ளதால், இனி அனைத்து கூட்டங்களும் பெங்களூரில் நடக்கவேண்டும் என்றும் தமிழகம் வலியுறுத்தியது.

கர்நாடக அதிகாரிகளோ அணைகளில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறினார்கள்.

இந்நிலையில் கூட்டத்தின் முடிவில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா திறந்துவிடவேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தெரிவித்தார்.

மேலும், தான் பணி ஓய்வு பெறுவதால் இது தனது கடைசி கூட்டம் என தெரிவித்த உசேன், அடுத்த கூட்டத்தை புதிய தலைவர் நடத்துவார் எனத் தெரிவித்தார.

இதனிடையே, கர்நாடகாவில் காவிரி அணைகளில் இருந்து நீர் திறக்கக் கோரி விவசாயிகள் இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தினர்.

மாண்டியா அருகே அமைச்சர் சிவகுமார் சென்றை வாகனத்தை வழிமறித்தனர்.

கர்நாடாகவோ, தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்பதால் நீர் திறந்துவிட முடியாது என விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடக அணை நீர்பிடிப்புப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உரிய அளவில் பெய்தால் இரு மாநில விவசாயிகளுக்கும் நிம்மதி கிடைக்கும். பொழியுமா தென்மேற்கு பருவமழை?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: