கே.ஆர்.எஸ். அணையில் கூடுதலாக தண்ணீர் திறப்பு - காவிரி நீர் நாளை தமிழகம் வந்தடையும் என எதிர்பார்ப்பு

பருவமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். போன்ற அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

news18
Updated: July 20, 2019, 9:51 AM IST
கே.ஆர்.எஸ். அணையில் கூடுதலாக தண்ணீர் திறப்பு - காவிரி நீர் நாளை தமிழகம் வந்தடையும் என எதிர்பார்ப்பு
காவிரி நீர் (கோப்புப் படம்)
news18
Updated: July 20, 2019, 9:51 AM IST
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கூடுதலாக 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை தமிழகத்திற்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பருவமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். போன்ற அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் குமாரசாமியின் உத்தரவின் பேரில் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளுக்காக 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் கூடுதலாக 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவு படி, கடந்த மே, ஜூன் மாதங்களில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 40 டிஎம்சி நீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் கர்நாடகா, தமிழகத்திற்கு நீர் திறந்து விடவில்லை. இந்நிலையில், நேற்று பிற்பகல் முதல் வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Loading...

இது நாளை மாலைக்குள் தமிழக எல்லையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...