கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 8:39 AM IST
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்
Web Desk | news18
Updated: July 26, 2019, 8:39 AM IST
கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை அடுத்த 5 நாட்களுக்கு கர்நாடகம் அதிகரிக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 11-வது ஆலோசனைக் கூட்டம் , ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன்குமார், அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 20-ம் தேதி நிலவரப்படி, நீர்பிடிப்புப் பகுதிகளில் குறைவான மழை பெய்ததால் கர்நாடகாவில் உள்ள 4 அணைகளுக்கான நீர்வரத்து, வழக்கத்தைவிட குறைவாக இருந்தது தெரியவந்ததாக அவர் கூறினார்.


எனினும், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து குறைவாக இருப்பதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக நவீன்குமார் தெரிவித்தார்.

மேலும்  படிக்க... அதிர வைக்கும் நூதன மோசடி!


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...