கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது – முரளிதர ராவ்

news18
Updated: April 16, 2018, 5:01 PM IST
கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது – முரளிதர ராவ்
பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ்
news18
Updated: April 16, 2018, 5:01 PM IST
‘காவிரிப் பிரச்னையில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது’ என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்  முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கர்நாடகாவில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான முரளிதர ராவ் இன்று பெங்களூர் வந்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரிப் பிரச்னையில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது.

அதே சமயம், இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் உண்மையான நலன்களைக் காக்க பாஜக துணை நிற்கும். நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்துவரும் இப்பிரச்னையில் காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடிக்கக் கூடாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இதுதொடர்பாக, பாஜக சார்பில் வெளியிடப்படவுள்ள தேர்தல் அறிக்கையில் உரிய வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்றார் முரளிதர ராவ்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்