மும்பையில் பட்டப்பகலில் பொதுத்துறை வங்கிக்குள் நுழைந்த 2 பேர், ஒருவரை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாஹிசார் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் உள்ளே முகத்தை மூடியவாறு நுழைந்த கொள்ளையர்களில் ஒருவர், ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். தடுக்க முயன்ற வங்கி ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
மற்றொரு நபர் காசாளரின் இருப்பிடத்திற்கு சென்று, அங்கிருந்த இரண்டரை லட்ச ரூபாய் பணத்தை பையில் எடுத்து போட்டுக் கொண்டதும், இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
Also read... அதிகரிக்கும் கொரோனா - மும்பையில் 144 தடை உத்தரவு அமல்!
Also read... 351 தளவாடங்கள் இறக்குமதி செய்வதற்கு ராணுவ அமைச்சகம் தடை!
Also read... டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!
இதனிடையே, காயமடைந்த வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விரைந்து செயல்பட்ட போலிசார், கொள்ளையர்களை கைது செய்து பணத்தையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mumbai