சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை

தொற்று நோய்களின் பிறப்பிடமாக  சீனா மாறிவருகிறது. கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றியது என்பது அனைவரும் அறிந்ததே. உலகம் கொரோனாவின் கோர பிடியிலிருந்து இன்னும் மீளாமல் சிக்கித்தவிக்கும் நிலையில், மற்றுமொரு வைரஸ் சீனாவிலிருந்து இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளதாக ஐசிஎம்ஆர் (ICMR) சமீபத்தில் எச்சரித்துள்ளது

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை
ஐ.சி.எம்.ஆர்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 9:15 AM IST
  • Share this:
சீனாவின் வூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் இந்தியாவை விட்டு செல்லாத நிலையில், சீனாவில் இருந்து மற்றொரு வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது இந்தியாவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர். சீனாவில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ள 'கேட் கியூ வைரஸ்' (சி.க்யூ.வி), இந்தியாவில் காய்ச்சல், மூளைக்காய்ச்சல் மற்றும் பீடியாட்ரிக்ட் என்செபாலிடிஸ் போன்ற நோய்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்று இந்தியாவின் Livemint கூறியுள்ளது.

CQV என்பது ஆர்த்ரோபாட் மூலம் பரவும் வைரஸ்கள் அல்லது ஆர்போவைரஸ்களாகும். சீனாவும், வியட்நாமும் கியூலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளுக்குள் சி.க்யூ.வி இருப்பதாக தெரிவித்துள்ளன. ஐ.சி.எம்.ஆர் ஆய்வின்படி, இந்திய கொசுக்கள், அதாவது ஈகிப்டி, சி.எக்ஸ். குயின்கெஃபாசியஸ், மற்றும் சி.எக்ஸ். ட்ரிடேனியர்ஹைஞ்சஸ், CQV க்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்று கண்டறியப்பட்டுள்ளது. CQV இன் முதன்மை பாலூட்டி ஸ்வைன்கள் தான்.

புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் (என்.ஐ.வி) விஞ்ஞானிகள் இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட 883 மனித சீரம் மாதிரிகளில் இரண்டில் CQV க்கான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், அந்த இரண்டு நபர்களும் ஒரு கட்டத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள் என்பதாகும்.


மேலும் படிக்க...பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..

இது நாட்டில் CQV பரவுவதற்கான அச்சத்தை எழுப்பியுள்ளது. CQV எதிர்ப்பு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள் கர்நாடகாவை சேர்ந்தவை. மேலும் ஒன்று 2014 மற்றொன்று 2017ல் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் மனிதர்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் காணப்படவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் கூறியது.



பரிசோதிக்கப்பட்ட மனித சீரம் மாதிரிகளில் சி.க்யூ.வி எதிர்ப்பு ஐ.ஜி.ஜி ஆன்டிபாடி நேர்மறையாகவும் கொசுக்களில் சி.க்யூவியின் பிரதிபலிப்பு திறன் ஆகியவை இந்திய சூழ்நிலையில் சி.க்யூ.வி நோயை ஏற்படுத்தும் திறனை குறிப்பதாகவும் உள்ளது. இந்த மதிப்பீடுகளை பயன்படுத்தி அதிக மனித மற்றும் பன்றி சீரம் மாதிரிகளை பரிசோதிப்பதன் மூலம் அந்த வெப்பமண்டல வைரஸின் பரவலை புரிந்துகொள்வதற்கான ஒரு எளிய வழி ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. 
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading