நாகப் பாம்புக்கே தண்ணிகாட்டிய பூனையின் அசாத்திய துணிச்சல்.. மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

வைரல் வீடியோ,

பூனைக்கு இப்போது 1.5 வயதாகிறது. மேலும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல எங்களுடன் வாழ்கிறது என்று கூறினார்.

  • Share this:
மனிதர்கள் மீது அக்கறை கொண்ட ஒரே செல்லப்பிராணி நாய்கள் தான் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறு என்று சொல்லும் வகையில், வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது ஒடிசாவில் வளர்ப்பு பூனை, தன் உரிமையாளர் வீட்டிற்குள் நுழைய முயன்ற ராஜ நாகம் ஒன்றை, நுழையவிடாமல் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வீட்டிற்கு காவல்காத்தது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஒடிசாவின் புவனேஸ்வரில் இந்த சம்பவம் நடந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டின் முன்பு பாம்பு வந்ததையடுத்து பாம்பு ஹெல்ப்லைன் அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை அடையும் வரை செல்லப் பூனை பாம்பை வீட்டினுள் நுழையவிடாமல் காவல் காத்து சாதனையை புரிந்திருக்கிறது. செய்தி நிறுவனமான ANI ஆல் பகிரப்பட்ட அந்த புகைப்படங்களில், சிறிய வெள்ளை பூனை, நாகப்பாம்புக்கு முன்னால் மிகுந்த எச்சரிக்கையுடன் நிற்பதைக் காணலாம்.

அதன் மூலம் பாம்பு வீட்டில் நுழைவதைத் பூனை தடுத்து கொண்டு நிற்கிறது என்பது புரியவருகிறது. இந்த சம்பவம் குறித்து பூனையின் உரிமையாளர் சம்பத் கே பரிடா கூறியதாவது, பூனைக்கு இப்போது 1.5 வயதாகிறது. மேலும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல எங்களுடன் வாழ்கிறது என்று கூறினார்.

 



மேலும், இணையத்தில் வைரலாக இந்த ட்வீட் எண்ணற்ற யூசர்களை கருத்துக்களை பெற்று வருகிறது. ANI இன் இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, பல யூசர்கள் செல்லப்பிராணி பூனைகளை வணங்குவதாக தெரிவித்தனர். மேலும் சில யூசர்கள் பூனை தன்னை ஒரு நாயாக மேம்படுத்திக் கொண்டது என்று கமெண்ட் செய்திருந்தனர்.





சிலர் தங்களது செல்லப்பிராணிகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் பூனைகள் தங்கள் உரிமையாளர்களை ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கூறினர். விசுவாசம் மற்றும் துணிச்சல் என்று வரும்போது, நாய்-காதலர்கள் மற்றும் பூனை-காதலர்கள் நிம்மதியாக இணைந்து வாழக்கூடிய ஒரு உலகத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது எனவும் ஒரு யூசர் பதிவிட்டிருந்தார். என்னதான் இதுபோன்ற பாசிட்டிவ் கமெண்ட்டுகள் வந்தாலும் பலர் பூனைகளை காட்டிலும் நாய் தான் சிறந்தது என போட்டி போட ஆரம்பித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ANI வெளியிட்ட ட்வீட் இப்போது 10,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. லட்சக்கணக்கில் கமெண்ட்டுகளை பெற்றுள்ளது. உரிமையாளர்களை காக்கும் செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் பல இணையத்தில் வலம்வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பேராபத்தில் இருந்து தனது உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றும் வீடியோக்கள் பல இணையத்தில் முன்பு வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: