ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை முன் காதல்ஜோடி சாதி மறுப்பு திருமணம்

புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை முன் காதல்ஜோடி சாதி மறுப்பு திருமணம்

திருமணம் செய்து கொண்ட ஜோடி

திருமணம் செய்து கொண்ட ஜோடி

அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று பௌத்த முறையில் காதல் ஜோடி ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரி அம்பேத்கர் மணிமண்டபத்தில் பௌத்த முறையில் காதல் ஜோடி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

புதுச்சேரி பிச்சை வீரன்பட்டை பகுதியை சேர்ந்தவர் லிங்க சுப்பிரமணியம் 23 வயது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் கல்லூரியில் படித்த போது சக மாணவி ஹேமலதாவுடன் காதல் ஏற்பட்டது.

திருமணத்திற்காக பெண்ணின் வீட்டை அணுகிய போது அவர்கள் திருமணம் செய்ய மறுத்தனர். காரணம் லிங்க சுப்பிரமணியன் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்தவர். ஹேமலதா பிராமண சமூகத்தை சேர்ந்தவர். இதனால் திருமணத்துக்கு பெண் வீட்டார் மறுத்தனர்.

இந்த நிலையில் இருவரும் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று பௌத்த முறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் மாப்பிள்ளை வீட்டார் மட்டும் பங்கேற்றனர்.

கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் மூட நம்பிக்கை மற்றும் சடங்கு சம்பிரதாயம் இன்றி புத்தர் சிலை முன் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து மணப்பெண் கூறுகையில், “மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து உள்ள கருத்துகள் ஏற்கும்விதமாக இல்லை. அதனால் எந்த மதமும் வேண்டாம் என்று முடிவு செய்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன்“ என்றுள்ளார்.

Published by:Vijay R
First published:

Tags: Puducherry