Home /News /national /

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்குபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்குபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்!

national highways

national highways

National Highways | நாடாளுமன்றத்தில் அமைச்சர் கட்கரி பேசியபோது, கடந்த 2020ஆம் ஆண்டில் இரு சக்கர வாகனங்கள் மூலமாக 1.58 லட்சம் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன என்று தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிகழ்வாகும். அதே சமயம், இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. குறிப்பாக விபத்தில் பாதிக்கப்படும் ஓட்டுநர்கள், பயணிகள், பாதசாரிகள், சைக்கிளில் செல்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்க திட்டமிடப்படுகிறது.

டெல்லி - மும்பை, மும்பை - சென்னை, சென்னை - கொல்கத்தா, கொல்கத்தா - ஆக்ரா மற்றும் ஆக்ரா - டெல்லி ஆகிய முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படும் அல்லது தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் முதல் 48 மணி நேரத்திற்கு இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.30,000 மதிப்பு வரையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. விபத்து குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்த பிறகு, நிகழ்விடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரத்தில் இருந்து இந்த 48 மணி நேரம் கணக்கீடு செய்யப்படும்.

விரைவில் டெண்டர் :

கட்டணமற்ற இலவச சிகிச்சை திட்டத்தை செயல்படுத்துவதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து விரைவில் டெண்டர் பெறப்பட உள்ளது. ஆனால், இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஐஆர்டிஏஐ அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், விபத்து காப்பீடு மருத்துவ சிகிச்சை திட்டத்தில் 5 ஆண்டு அனுபவம் உள்ளதாகவும், கடைசி 3 ஆண்டுகளில் கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ 85 சதவீதத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.



மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிடுவது என்ன?

இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், “தற்போது தேர்வு செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று பிற நெடுஞ்சாலைகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

Also Read : கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? இதை படியுங்கள்..

டெண்டரில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், திட்டம் அமலுக்கு வந்த பிறகு தான் இதன் வெற்றி நிலை குறித்து நாம் கணக்கீடு செய்ய முடியும்’’ என்று தெரிவித்தார்.

Also Read : ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக மலிவு விலைவில் கிடைக்கும் டாப் 5 கார்களின் பட்டியல்!

இரு சக்கர வாகன விபத்துகள் அதிகம் :

முன்னதாக, நாடாளுமன்றத்தில் அமைச்சர் கட்கரி பேசியபோது, கடந்த 2020ஆம் ஆண்டில் இரு சக்கர வாகனங்கள் மூலமாக 1.58 லட்சம் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன என்று தெரிவித்தார். 2019ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் மூலமாக 56,136 பேர் பலியாகினர் என்றும் அவர் கூறினார். அதே ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை 1,67,184ஆக இருந்தது.
Published by:Selvi M
First published:

Tags: Accident, Insurance, Nitin Gadkari

அடுத்த செய்தி