டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி நவீன் சாவ்லா அமர்வில் பி.எம்.கேர்ஸ் நிதியை அரசு நிதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், “இந்த நிதி பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் இதன் அறங்காவளர்களாக உள்ளனர். பி.எம்.கேர்ஸ் (PM Cares) ஐ தனிப்பட்ட முறையிலான நிதியாக பயன்படுத்தினால் மத்திய அரசின் இணைய தளத்தையோ, அலுகலகத்தையோ அதற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று வாதிட்டார்.
“ஆனால் துணை குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் இதனை மத்திய அரசின்நிதி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். உலக நாடுகள் முன்பாக இந்திய அரசின் நிதி என்று கூறித்தான் PM Cares- க்கு நன்கொடை பெறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையே தொடர அனுமதித்தால் இது முறைகேட்டுக்கு வழிவகுக்கும். நாளை இது தனியார் நிறுவனமாகக் கூட மாற வாய்ப்புள்ளது என்றும், வழக்குப் தொடரப்பட்ட போது PM Cares நிதியில் 3,100 கோடி வசூலிக்கப்பட்டிருந்தது. கணக்குகள் குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் வழங்கப்படுவதில்லை” என்று மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.

பி.எம்.கேர்ஸ்
Must Read : தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா? - ராதாகிருஷ்ணன் விளக்கம்
இந்த விவகாரத்தில் பதிலளிக்க, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா அவகாசம் கோரியதையடுத்து வழக்கு விசாரணை கோடை விடுமுறைக்கு பிறகு, அதாவது ஜுலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.