Home /News /national /

பில்கிஸ் பானோ வழக்கு : 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

பில்கிஸ் பானோ வழக்கு : 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று 11 குற்றவாளிகளைக் குஜராத் அரசு விடுதலை செய்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    பில்கிஸ் பானோ வழக்கில் கைது செய்து சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்ட 11 குற்றவாளிகளைக் குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் அவரது குடும்பத்தினர் 14 பேரைக் கொலை செய்த வழக்கில் 2004இல் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளைக் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது. இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இந்த விடுதலையை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மேலும் பலர் இணைத்து தொடுத்துள்ள வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இல்லை, குஜராத் அரசு குற்றவாளிகளை எந்த விதத்தில் விடுதலை செய்தனர் என்பதை எதிர்த்துத் தான் என்று கூறியுள்ளார்.

    பிப்ரவரி 27, 2002இல் கோத்ராவில் இருந்து அயோத்திக்குத் திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு 14 குழந்தைகள் உட்பட 57 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குஜராத்தில் வெடித்த கலவரத்திலிருந்து தப்பிக்க ஓடிய பில்கிஸ் பானோவை ஐந்து மாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல்  பாலியல் வன்கொடுமை செய்து மேலும் அவரின் 3 வயது பெண் குழந்தையுடன் சேர்த்து அவரின் குடும்ப நபர்கள் 14 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டு இந்த 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also Read : போலீஸிடம் துப்பாக்கியை கட்டி மிரட்டி தப்பிய வட மாநில திருடர்கள்.. அதிர்ச்சி வீடியோ

    இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய பரீசிலிக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெறிமுறைகளை அனுப்பியிருந்தது. மேலும் அதில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுவிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தடையை மீறி குஜராத் அரசு பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தினர் 14 பேரையும் கொன்ற 11 குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது. விடுதலையான குற்றவாளிகளை இனிப்பு கொடுத்து வரவேற்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இந்த செயலில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ குற்றவாளிகளின் விடுதலை வேதனை அளிப்பதாகக் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Gujarat attacks, Gujarat rape case, Supreme court

    அடுத்த செய்தி