முகப்பு /செய்தி /இந்தியா / விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயற்சி.. பயணி மீது வழக்கு பதிவு..!

விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயற்சி.. பயணி மீது வழக்கு பதிவு..!

இண்டிகோ விமானம்

இண்டிகோ விமானம்

விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் உள்ள அவசரகால கதவைத் திறக்க முயற்சித்ததாக விமான பைலட்டுக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பயணிக்கு உரிய முறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அவசரகால கதவை சேதப்படுத்தியதற்காக அந்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து தேஜஸ்வி சூர்யா தவறுதலாக அதை திறந்துவிட்டார் எனவும் அதற்கு பிறகு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் மத்திய அமைச்சர் ஜோதிராத்தித்ய சிந்தியா அந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Case, Indigo, Indigo Air Service