Home /News /national /

பீகாரில் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம் செய்த பிரிவில் வழக்குப் பதிவு!

பீகாரில் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம் செய்த பிரிவில் வழக்குப் பதிவு!

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அரசியல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ஆகியோரின் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் மீது மோதிகாரியை சேர்ந்த சாஸ்வத் கவுதம் என்பவர் பாடலிபுத்திரா காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    அதில், பீகாரை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காகப் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் பாத் பீகார் கி இயக்கம், தன்னுடைய கருத்துருவைப் திருடிப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியிலிருந்த பிரசாந்த் கிஷோர் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Prashant Kishor

    அடுத்த செய்தி