நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு!

நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல், சித்ரவதை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் குஜராத் மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated: November 19, 2019, 6:34 PM IST
  • Share this:
நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல், சித்ரவதை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் குஜராத் மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


நித்யானந்தாவால் ஈர்க்கப்பட்ட கும்பகோணத்தை பூர்வீகமாகக்கொண்ட ஒருவர், 2016-ம் ஆண்டு அவரிடம் சீடராக சேர்ந்தார். சில மாதங்களில் நித்யானந்தாவின் நான்கு தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் உள்ள குருகுலத்தில் தனது 3 மகள்களையும் ஒரு மகனையும் அவர் சேர்த்தார்.


இந்த நிலையில்தான், நவம்பர் 2-ம் தேதி, குஜராத் அஹமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தனது வாரிசுகளை சந்திக்கச் சென்றார் அந்த செயலாளர். மனைவியுடன் சென்ற செயலாளரை, மகள்களை சந்திக்க விடாமல் ஆசிரமத்தில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். நித்யானந்தாவின் தனிப்பட்ட செயலாளரான தனக்கே அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்று அவர் கேட்க, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து, அகமதாபாத் நித்தியானந்தா ஆசிரமத்திலிருக்கும் மூன்று மகள்களையும் மீட்க அவர் சட்டப்போராட்டம் நடத்திவருகிறார்.

ஆசிரமத்தில் தனது குழந்தைகளை அடைத்து வைத்து சித்தரவதை செய்வதாக உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தார். அதேபோல, தேசிய குழந்தைகள் நல ஆணையம், உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளிடமும் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், சர்மாவின் ஒரு மகள் ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘ஆசிரமத்தில் இரவில் கூட பணி செய்யச் சொல்லி சித்தரவதை செய்கின்றனர். ஒரு சிறுமி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஆசிரமத்துக்குள் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பே இல்லை’ என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.அதனையடுத்து, அந்தச் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நித்தியானந்தா மற்றும் மடத்தின் நிர்வாகிகள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கடத்தல், மிரட்டல், சித்ரவதை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தியதால் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
First published: November 19, 2019, 6:04 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading