முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களை பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியிருந்தார்.

முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
முன்னாள் நீதிபதி கர்ணன்
  • Share this:
உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட முன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் முன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன். இவர் மேற்கு வங்கத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதித்து பேசியதாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கடந்த 2017-ம் ஆண்டு இவரை கைது செய்தது.

இந்த நிலையில் சமீபத்தில் சி.எஸ் கர்ணன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. அந்த வீடியோவில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களை பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியிருந்தார்.


இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைன் மூலமாக புகார்கள் வந்தன. விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வீடியோவை ஆய்வு செய்தபோது, அவர் உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களை பற்றி ஆபாசமாக பேசியது உறுதியானது.

இதனையடுத்து முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது, கலகம் செய்யும் நோக்கோடு செயல்படுதல்,மற்றும் சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாக பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading