Home /News /national /

தெரு நாய் மீது கொடூர தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள் - மின்வாரிய ஊழியர் மீது வழக்குப் பதிவு

தெரு நாய் மீது கொடூர தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள் - மின்வாரிய ஊழியர் மீது வழக்குப் பதிவு

தெருநாய் மீது கொடூர தாக்குதல்

தெருநாய் மீது கொடூர தாக்குதல்

இந்த கொடூர தாக்குதல் நடத்திய நபருக்கு நீதிமன்றம் மூலமாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தெரு நாய் ஒன்றை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கண்ணில் கம்பியால் அடித்து காயப்படுத்திய CCTV காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியில் உள்ள கேரளா மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் முரளி. மின்வாரிய அலுவலகத்தின் முன் பகுதியில் கடந்த ஜூன் 14 அன்று இரவு 8 மணி அளவில் மின் வாரிய ஊழியர் முரளி என்பவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் பம்பர் ல்  தெரு நாய் கடித்ததாக கூறி இரும்பு கம்பியால் அந்த நாயை சரமாரியாக தாக்கி கால்களை அடித்து உடைத்ததோடு நாயின் கண்களை கம்பியால் அடித்து காயப்படுத்தி உள்ளார். பார்த்து நின்ற பலரும் இந்த கொடூர செயலை தடுக்க முயன்றனர். ஆனால் முரளி தொடர்ந்து நாயை கம்பியால் தாக்கி உள்ளார்.

கொடூரமான இந்த தாக்குதலில் நாயின் கால்கள் ஒடிந்து தலை மற்றும் கண்கள் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதைப்பார்த்த ஒருவர்  People for Animal என்ற விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வந்து பார்த்த போது கல் நெஞ்சம் கொண்ட முரளி என்றவரின் கொடூர தாக்குதலால் நாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை பார்த்த அவர்கள் நாய்க்கு முதல் உதவி அளித்தனர்.

அந்த வேளையில் நாய் அரவணைப்பை உணர்ந்து தனது வாலை அசைத்து நன்றியை வெளிப்படுத்துவதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதும் இரண்டு வயது மதிக்கும் அந்த நாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் இருந்து வருகிறது. கொடூர செயலில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர் முரளி மீது மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

விசாரணையில் இந்த நாயின் பெயர் ஹோப் என தெரியவந்துள்ளது. அதே பகுதியில் உள்ள ஒரு சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் இந்த நாயை பாசமாக வளர்த்து வந்துள்ளார்.  அந்த வீட்டில் சமீபத்தில் இன்னொரு நாயை கொண்டு வந்து வளர்ப்பதை தொடர்ந்து ஹோப் என்ற இந்த நாய் கோபத்தாலும் வருத்தம் காரணமாகவும் அந்த வீட்டை விட்டு வெளியேறி மின்வாரிய அலுவலக வளாகத்தில் தானாகவே இடம் மாறி சென்றது.

இருந்தாலும் உரிமையாளர் தனது பாசக்கார நாய்க்கு தினம் தோறும் அது தங்கும் இடத்திற்கு உணவு கொண்டு சென்று வழங்குவதும் வழக்கம். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாயை காணாமல் அதை தேடி அலைந்து அவர் நாயை தாக்கி உயிருக்கு போராடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து உரிமையாளர் மிகுந்த மனவேதனைக்கு தள்ளப்பட்டார். அவர் தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று தனது பாசக்கார நாயை பார்த்து அதன் உடல் நலம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பிறகும் ஒரே இடத்தில் வசிக்கும் தெரு நாய்.! கூகுள் மேப்ஸ் இமேஜால் நெட்டிசன்கள் வியப்பு.!

இந்த தாக்குதல் தொடர்பான கொடூர சிசிடிவி  காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு இந்த கொடூர தாக்குதல் நடத்திய நபருக்கு நீதிமன்றம் மூலமாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.
Published by:Kannan V
First published:

Tags: CCTV Footage, Dog

அடுத்த செய்தி