பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. மும்பை நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாயை நெருங்கியுள்ளது. தெலங்கானாவில் 102 ரூபாயை கடந்துள்ளது. பெட்ரோல் விலை தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தியாவின் தேவையில் 80 சதவீத எரிபொருட்களை இறக்குமதி செய்து வருவதால் அவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுவதாக எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தமன்னா ஹாஸ்மி என்பவர் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்பாக, கொரோனாக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக மக்களை தவறாக வழிநடத்துகிறா என பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவ் மீதும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது, முசாபர்பூர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள மனுவில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை மிகவும் குறைவாக உள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: கொரோனா அலைகளுக்கு தேதி குறிக்க வேண்டாம்...
மேலும், எரிபொருட்களின் விலை உயர்வு மக்களை அச்சமும் கோபமும் அடைய செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோசடி, குற்றம் செய்ய முயற்சித்தல். வேண்டுமென்றே தீங்கிழைக்கு செயல்கள் தொடர்பான பிரிவுகளின் கீழ் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று தமன்னா ஹாஸ்மி கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.