ஹோம் /நியூஸ் /இந்தியா /

அசாமில் பயங்கரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சாக்குப்பையில் கட்டி காட்டில் வீசிய கொடூரம்!

அசாமில் பயங்கரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சாக்குப்பையில் கட்டி காட்டில் வீசிய கொடூரம்!

கைது செய்யப்பட்ட நபர்

கைது செய்யப்பட்ட நபர்

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பையில் போட்டு தூக்கி போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Assam, India

  அசாமில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை முயற்சியில் ஈட்டுப்பட்ட 26 வயது நபரை போலீஸ்சார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 3ம் தேதி சிறுமி துர்கை அம்மன் சிலை கரைக்கும் பூஜைக்கு செல்லவாதக கூறி சென்றுள்ளார். நெடுநேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் அடுத்த நாள் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  அதே நாள் மதிய வேலையில் சிறுமி உடல் காயங்களிடம் துணி கிழிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். சிறுமி கொடுத்த தகவலின் படி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் காவலர்கள் 26 வயது நபரைக் கைது செய்துள்ளனர்.

  புகாரில் அந்த நபர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கழுத்தை அறுத்துக் கொலை முயற்சி செய்துள்ளான் என்றும் பின்னர் சிறுமியை சாக்கு பையில் போட்டு காட்டுக்குள் தூக்கிப்போட்டுள்ளான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : 'இந்தியை தேசிய மொழியாக்குவீர்களா?’ - பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்காந்தி சொன்ன பளிச் பதில்!

  விசாரணையில் அந்த நபர், சிறுமி தன் காதலி என்றும் பூஜைக்கு வேறு நபருடன் சென்றதால் கோபத்தில் செய்ததாகக் கூறியுள்ளான். காட்டிக்குள் வீசப்பட்ட சிறுமி தானாகவே போராடி சாக்கு பையிலிருந்து வெளியில் வந்து வீடு திரும்பியுள்ளார்.

  தற்போது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Assam, Kidnap, Rape case