ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் சிறை: ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை

ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் சிறை: ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை

காட்சிப் படம்

காட்சிப் படம்

தொடர்ந்து இது போன்ற விதிமீறல்களில்  ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரயில்களில் பட்டாசு  எடுத்து  சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு ,டீசல் , பெட்ரோல் போன்ற பொருட்களை எடுத்து செல்ல தடை உள்ளது. இருப்பினும் தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்வார்கள். இதை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்படும்.

இந்நிலையில், விதியை மீறி பட்டாசு எடுத்து சென்றால் , அவர்கள் மீது கடும் நடைவடுக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளனர் . முதல் முறையாக பிடிபட்டால் 1000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும், தொடர்ந்து இது போன்ற விதிமீறல்களில்  ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கதமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சீமான் வலியுறுத்தல்

அடுத்த வாரம் முதல் பட்டாசு எடுத்து செல்லுவதை தடுக்கும் வகையில்  மெட்டல் டிடேக்கடர்  உதவிவுடன் பணியாளரின் உடைமைகளை சோதனை செல்ல உள்ளதாக மேலும் கூறியுள்ளது.

Published by:Vijay R
First published:

Tags: Ban firecrackers, Crackers, Deepavali, Diwali