Home /News /national /

நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் - விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாப பலி

நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் - விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாப பலி

உத்தரகாண்டில் கார் விபத்து

உத்தரகாண்டில் கார் விபத்து

உயிரிழந்த ஒன்பது பேரில் ஏழு பேர் பெண்கள் என மாவட்ட நிர்வாகம் அளித்த தகவலில் தெரியவந்துள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் பகுதியில் கார் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றதில் அதில் பயணித்த ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் டேலா என்ற நதி ஓடுகிறது. இந்த பகுதியில் ஏற்பட்ட கனமழை வெள்ளப் பெருக்கு காரணமாக நதியின் வேகம் நேற்றில் இருந்து தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 10 சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு காரில் சுற்றுலா வந்துள்ளனர். இந்த சுற்றுலாப் பயணிகள் வந்த கார் அதிகாலை 5.30 மணி அளவில் ராம்நகர் பகுதியை கடந்த போது டேலா நதி வெள்ளத்தில் அடித்து சென்றுள்ளது.

    இந்த வெள்ள விபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். நாசியா என்ற 22 இளம் பெண் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இவர் ராம்நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கௌரவ் சடாவல் கூறுகையில், இந்த காரில் பயணித்த 10 பேரில் 7 பேர் பெண்கள். இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக உள்ளது.

    இதையும் படிங்க: வேலை செய்யாமல் சம்பளம் வாங்க மனம் உறுத்துகிறது - ரூ.24 லட்சத்தை திரும்பி தந்த பேராசிரியர்

    காரின் பதிவு எண்ணை வைத்து இவர்கள் பஞ்சாப்பின் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இருவர் மட்டும் உத்தராகண்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வெள்ள பாதிப்பில் வேறு நபர்கள் யாரேனும் அடித்து செல்லப்பட்டார்களா எனவும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Car accident, Uttarkhand

    அடுத்த செய்தி