பார்க்கிங்கில் திடீர் பள்ளம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார்.. அதிர்ச்சி வீடியோ

பள்ளத்தில் முழ்கிய கார்

நல்லவேளையாக இந்த விபத்து நடந்த போது காருக்குள் யாரும் இல்லை இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

  • Share this:
    மும்பையில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சொகுசு கார் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கும் வீடியோ ஒன்று இன்று மதியத்தில் இருந்து இணையத்தில் பரவி வருகிறது. பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. கார் முழுவதுமாக அந்த பள்ளத்தில் மூழ்கிவிட்டது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவானது மும்பையில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    Also Read: சாலையில் தேங்கிய மழைநீர்.. ஒப்பந்ததாரர் தலையில் குப்பையை கொட்டிய சிவசேனா எம்.எல்.ஏ- இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

    மும்பையின் மேற்கு பகுதியான காட்கோபரில் உள்ள ராம் நிவாஸ் சோஷைட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப்பகுதியில் இருந்த கிணற்றை கான்கிரேட் தளம் கொண்டு மூடியுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள குடியிருப்புவாசிகள் அந்த இடத்தை கார் பார்க்கிங்காக பயன்படுத்தி வந்துள்ளனர். மும்பையில் நேற்று நல்ல மழை எனக் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராம் நிவாஸ் பகுதியில் மழை பெய்துள்ளது. அந்த கிணறு பாழடைந்த இருந்ததா அல்லது பயன்பாட்டில் இருந்தபோது மூடப்பட்டதா என அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. மழையின் காரணமாக கிணற்றில் நீர் ஊற்று எடுத்துள்ளது. இந்நிலையில்தான் அரைகுறையாக போடப்பட்ட கான்கிரீட் தளம் சேதமடைந்து அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

     



    நல்லவேளையாக இந்த விபத்து நடந்த போது காருக்குள் யாரும் இல்லை. பார்க்கிங் பகுதியிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் நடக்கவில்லை. இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியில் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்தபகுதியில் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: