கேரளா மாநிலம் மலப்புரம் அருகே ஓட்டுநர் தூக்கக கலக்கத்தில் ஓட்டியதால், தனியார் பேருந்தின் பின்பகுதியில் கார் மோதியது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் அருகே செம்மாடு பகுதி வழியாக குந்தும்புரம் என்ற பகுதிக்கு காலை 8 மணிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்பகுதியில், அதிவேகத்தில் வந்த கார் ஒன்று மோதியதில் காரின் முன் பகுதி முழுவதுமாக சிதைந்தது.
பயணிகள் ஏறுவதற்கு ஏதுவாக நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தியபோது, அதன் பின்புறம் நேராக வந்த கார் வேகமாக மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மலப்புரம் போலீசார் நடத்திய விசாரணையில் காரின் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
Must Read : முதல்வர் ஸ்டாலினிடம் கிறிஸ்தவ புத்தகம் கொடுத்த கவிதா ஐஏஎஸ்... அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பாஜக பதிலடி
இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.