Home /News /national /

பாஜகவில் இணைகிறாறாரா பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்?

பாஜகவில் இணைகிறாறாரா பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்?

பாஜகவில் இணையும் கேப்டன் அம்ரீந்தர் சிங்

பாஜகவில் இணையும் கேப்டன் அம்ரீந்தர் சிங்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உற்ற தோழரான அம்ரீந்தர் சிங், ராஜீவின் அழைப்பால் 1980களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரான கேப்டன் அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அம்ரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கினார். இந்த கட்சியையும் பாஜகவுடன் அவர் இணைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

    முன்னதாக முதுகில் அறுவை சிகிச்சை செய்வதற்காக லன்டன் சென்றுள்ள அம்ரீந்தர் சிங், அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வந்தவுடன் அவர் பாஜகவில் இணைவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்ரீந்தர் சிங்கை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரது உடல் நலன் குறித்து விசாரித்தார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உற்ற தோழரான அம்ரீந்தர் சிங், ராஜீவின் அழைப்பால் 1980களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மக்களவை உறுப்பினரான அம்ரீந்தர், சீக்கியர்களின் புனித இடமான தங்கக் கோயிலில் இந்திரா காந்தி நடத்திய ஆப்ரேஷன் புளு ஸ்டாருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் சிரோமணி அகாலிதளத்தில் இணைந்த அவர் மாநில அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.

    1992ஆம் ஆண்டில் சிரோமணி அகாலி தளத்தில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய அம்ரீந்தர், 1998ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இனைந்து கொண்டார். அப்போது அவரது நண்பரின் மனைவியான சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்தார். பின்னர் 2002ஆம் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், மாநிலத்தின் முதலமைச்சரானார் அம்ரீந்தர் சிங். 2007ஆம் ஆண்டு சிரோமணி அகாலிதளம் மீண்டும் ஆட்சியை பிடித்ததால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அவர், 2017ஆம் ஆண்டு தேர்தலை வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார். இவரது இரண்டாவது ஆட்சி காலத்தில் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சிக்கு நுழைந்து மேலிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் நிகழ்ந்த அடுத்த நாளே நோட்டீஸ் - வருமான வரித்துறை லவ் லெட்டர் அனுப்பியுள்ளது என சரத் பவார் கிண்டல்

    இவருக்கும் சித்துவுக்கு பனிப்போர் நிலவி வந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். பின்னர் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்ரீந்தர் சிங், அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பின்னர் தனிக் கட்சி தொடங்கினார். 2022ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து களம் கண்ட அம்ரீந்தர் தற்போது பாஜகவிலேயே ஐக்கியமாகவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Amarinder Singh

    அடுத்த செய்தி