• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜகவில் சேர முடிவு?: மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் சந்திப்பு!

பாஜகவில் சேர முடிவு?: மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் சந்திப்பு!

கோப்புக் காட்சி

கோப்புக் காட்சி

டெல்லிக்கு சென்ற அமரீந்தர் சிங் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவரது முதல் டெல்லி பயணம் இதுவாகும். 

  • Share this:
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருமான அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வராக இருந்த  அமரீந்தர் சிங்கிற்கும்,  மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல்போக்கு இருந்து வந்தது.  இந்த மோதல் போக்கின் உச்சமாக தனது  முதல்வர் பதவியையே அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதன் பின்னர், புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக்கொண்டார்.

    தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்வதாக பதவி விலகலுக்கு பின்னர் அமரீந்தர் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கிடையே,  காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். இவ்வாறு பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி வருகின்றன.

    இந்நிலையில், அடுத்த  அதிரடியாக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளார். டெல்லிக்கு சென்ற அமரீந்தர் சிங் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவரது முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

    இதையும் படிங்க: கொரோனா காலத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி


    இந்த சந்திப்பின்போது விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் மீது அமரீந்தர் சிங் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் பாஜகவில் சேரப்போவதாகவும் கூறப்படும் ஊகங்களை இந்த சந்திப்பு வலுபெற செய்துள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: