புத்தாண்டு தொடக்கத்தில் நடுங்குகிறது டெல்லி: 15 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்; வானை மறைக்கும் பனிமூட்டம்

டெல்லி ராஜ்காட் பகுதியில் பார்வையை மறைக்கும் கடும் பனிமூட்டம்.

வியாழனன்று குறைந்தபட்ச வெப்ப நிலை 3.3 டிகிரி செல்சியசாக இருந்தது. அதிகபட்ச வெப்ப அளவு நேற்று 15.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.

  • Share this:
    டெல்லியில் 2021-ம் ஆண்டு  கடுங்குளிருடன் தொடங்கியுள்ளது. வானை மறைக்கும் அடர் பனிமூட்டம் நிலவுகிறது. 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.1 டிகிரி செல்சியசுக்கு வெப்ப அளவு குறைந்து கடும் குளிருடன் டெல்லி மக்கள் கண்விழித்துள்ளனர்.

    அடர் பனிமூட்டத்தினால் சாலைகளில் ஒன்றுமே கண்களுக்குப் புலப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் 2.4 டிகிரி செல்சியஸ் என்று மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவானது. சப்தர்ஜங் மற்றும் பாலம் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் சாலையில் எதுவுமே தெரியவில்லை, அந்த அளவுக்கு அடர் பனிமூட்டம் காணப்பட்டது.

    டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கொண்டே வந்தது. டிசம்பரில் சராசரி குறைந்த வெப்ப அளவுக்கும் கீழ் வெப்ப நிலை தாழ்ந்தது. டிசம்பரில் இது 15 ஆண்டுகளில் இல்லாத தாழ் வெப்ப நிலையை எட்டியது.

    வியாழனன்று குறைந்தபட்ச வெப்ப நிலை 3.3 டிகிரி செல்சியசாக இருந்தது. அதிகபட்ச வெப்ப அளவு நேற்று 15.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.

    பொதுவாக 10 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் வெப்ப அளவு குறையும் போது குளிர் அலை என்று அறிவிக்கப்படும். குறைந்தபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறையும் போது ‘கடும் குளிர் அலை’ என்று அறிவிக்கப்படும்.

    டெல்லியில் டிசம்பரில் மட்டும் 8 முறை குளிர் அலை வீசியது. டிசம்பர் 2018-லும் இதே அளவு குளிர் அலை வீசியுள்ளது. 1965-ல் டிசம்பர் மாதம் 9 குளிர் அலை வீசியுள்ளது, இதுதான் மிக அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் கூறுகிறது.
    Published by:Muthukumar
    First published: