வாகன மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை தேசிய தலைநகரில் நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவதற்கு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பொதுவாக குளிர் காலங்களில் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் முடிந்த போகத்தின் விவசாய குப்பைகளை எரித்துவிட்டு அடுத்த விதைத்தலுக்கு நிலத்தை ஏற்பாடு செய்வர். இந்த எரித்தல் நிகழ்வுகளால் காற்றில் ஏற்படும் மாசு, காற்றின் சுழற்சியில் தலைநகர் டெல்லி வரை பரவுகிறது.
ஏற்கனவே அதிகரித்துள்ள வாகனப் பயன்பாட்டால் உண்டாகும் புகையோடு, இந்த புகையும் குளிர்கால பனியோடு இணைந்து smog எனப்படும் மாசு கலந்த அடர் பனியாக மாறி விடுகிறது.
இந்த அடர் மாசு பனியால் மக்களுக்கு சுவாச பிரச்சனைகள் வருவதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. அடர்த்தியான கம்பளியைப் போர்த்தியது போல் காணப்படும் இந்த நிலையைக் குறைக்க அரசாங்கங்கள் பெரிதும் முயன்று வருகின்றன. நாட்டிலேயே குளிர் காலத்தில் ஏற்படும் இந்த அடர் பனி காரணமாக பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் அரசு டெல்லி தான்.
அதன் ஒரு நடவடிக்கையாக, குளிர்காலத்தில் ஏற்படும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க நவம்பர் 1, 2022 முதல் பிப்ரவரி 28, 2023 வரை நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவது தடை செய்யப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசால் ஜனவரி முதல் தலைநகரில் நிலக்கரிக்குத் தடை!
ஜூன் 15 அன்று, டெல்லி அரசாங்கம் அதன் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில் நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், அக்டோபர் 1 முதல் BS VI-இணக்கமான பேருந்துகளை மட்டுமே தேசிய தலைநகருக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. நகரத்தின் வாகன மாசுபாட்டின் சிக்கலைச் சமாளிக்க இந்த கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சிறப்பு ஆணையர், ஓ.பி.மிஸ்ரா வெளியிட்ட செய்திக்கு குறிப்பில், தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு நிலைமை உச்ச நீதிமன்றம் மற்றும் CAQM (டெல்லி மற்றும் NCR இல் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையம்) ஆகியவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. காற்று மாசுபாடு மற்றும் வாகன மாசுபாட்டை திறம்பட கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அவை வகுத்தளித்துள்ளன என்றார்.
வாகன புகையைக் கட்டுப்படுத்த ஒற்றை இலக்க இரட்டை இலக்க வாகன முறையை சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution, Ban, Delhi Capitals, Vehicle