ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவியின் தகாத உறவை நிரூபிக்க மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்

மனைவியின் தகாத உறவை நிரூபிக்க மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்

Husband - wife

Husband - wife

மனைவி கருக்கலைப்பு செய்ததாக கூறி அதற்காக மருத்துவரை ஆஜராக வேண்டும் என கணவரின் மனுவை ஏற்பது விதிமீறலாகும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மனைவி, கணவரின் கள்ளத்தொடர்பை நிரூபிக்க தனிப்பட்ட மருத்துவ ஆவணங்களை பயன்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

  கணவர் - மனைவிக்கு இடையேயான விவகாரத்து வழக்கு ஒன்றில், கணவரின் முறையீட்டினை ஏற்ற குடும்ப நல நீதிமன்றம், மனைவியின் தகாத உறவை நிரூபிப்பதற்கு மருத்துவரை ஆஜராகும்படி உத்தரவிட்டது. இருப்பினும் இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதை போன்றதாகும், தனிப்பட்ட நபரின் மருத்துவ ஆவணங்களை கணவர் உட்பட யாரும் கேட்டுப் பெற முடியாது என்பதாக கூறி கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தர்வாத் கிளை நீதிமன்றத்தில் மனைவி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி என்.எஸ்.சஞ்சய் கவுடா முன்னிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் மனைவியின் தரப்பிலான மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

  Also read:  மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மதபோதகரின் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்

  மருத்துவரை ஆஜராகும்படி கோருவதற்கு வலிமையான காரணங்கள் தேவை அல்லது பொதுநலன் கருதும் நேரங்களில் மட்டுமே அவ்வாறு உத்தரவிட முடியும், மனைவி கருக்கலைப்பு செய்ததாக கூறி அதற்காக மருத்துவரை ஆஜராக வேண்டும் என கணவரின் மனுவை ஏற்பது விதிமீறலாகும். தனி மனைவி கருக்கலைப்பு செய்ததாக கூறி அதற்காக மருத்துவரை ஆஜராக வேண்டும் என கணவரின் மனுவை ஏற்பது விதிமீறலாகும். மனிதர்களின் மருத்துவ ஆவணங்களை பொதுப் பார்வைக்கு கொண்டு வருவது அரசியலைப்பு சட்டப்பிரிவு 21 அளித்துள்ள தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது போல அமையும்.

  Also read:  இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை

  தனது மனைவி 2 ஆண்டுகளாக தன்னை மிருகத்தனமாக நடத்தி வருவதாகவும், ஏமாற்றி வருவதாகவும் கணவர் இந்த விவகாரத்து வழக்கினை தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக கணவரிடம் இருந்து செலவுத் தொகை கேட்டு மனைவியும் வழக்கு தொடர்ந்துள்ளார். கணவர் கோரிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சட்டப்படியான சாட்சிகளை அவர் கொண்டு வர வேண்டும். தனிப்பட்ட நபரின் மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க கோரக்கூடாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

  Published by:Arun
  First published:

  Tags: Divorce, Illegal relationship, Toxic Relationship