ஹோம் /நியூஸ் /இந்தியா /

கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது... பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் கறார்

கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது... பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் கறார்

மாதிரி படம்

மாதிரி படம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என மத்திய அரசு வாதிட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளி வைத்துள்ளது.

பணமதிப்பிழப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, பணமதிப்பிழப்பு திட்டம் மக்களை பெரிதும் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட்டதாகவும், இது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது எனவும் வாதிட்டார்.

இதையும் படிக்க :  பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய ஆம் ஆத்மி.. டெல்லி மாநகராட்சி தேர்தலில் அபார வெற்றி!

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், பொருளாதாரக் கொள்கைகள் எனக் கூறி எங்களை கட்டிப்போட முடியாது, பொருளாதாரம் சார்ந்த முடிவு என்பதற்காக அது செயல்படுத்தப்படும் விதங்களை நாங்கள் கையை கட்டிகொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம் என கூறி நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

First published:

Tags: Demonetisation, Narendra Modi, Supreme court