Mission 2024: பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்க்கப்படுமா? இல்லையா? - சரத் பவார் பதில்..!

சரத்பவார்,

மகாராஷ்டிராவில் காங்கிரஸின் கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்குவதில் சரத் பவார் ஈடுபட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மாநில கட்சிகளின் எழுச்சி தேசிய அரசியலில் மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையை எதிர்கட்சிகளுக்கு அளித்திருக்கின்றன.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்காகவும், தமிழகத்தில் திமுகவுக்காகவும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து 100% வெற்றியை ருசித்திருக்கிறார் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். சட்டமன்ற தேர்தல்களுக்கு பிறகு தனது பணிக்கு முழுக்கு போடுவதாக அறிவித்த பிரசாந்த் கிஷோரின் பார்வை தற்போது தேசிய அரசியல் பக்கமாக திரும்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதற்கேற்றார் போல தேசிய அளவில் மிக மூத்த அரசியல்வாதியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, பிரசாந்த் கிஷோர் அவரின் இல்லத்தில் வைத்து சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக டெல்லியில் கடந்த வாரம் மீண்டும் ஒரு முறை பிரசாந்த் கிஷோர் - சரத் பவார் சந்திப்பு அரங்கேறியது.

Also Read:  கொரோனா பயங்கரம்: நோய்த்தொற்று அச்சத்தால் 5 வயது மகளை குத்திக் கொலை செய்த தாய்!

மிஷன் 2024 எனப்படும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை அணி திரட்டவே இந்த சந்திப்பு என பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பின்னர் மறு நாளே சரத் பவார் தலைமையில் 8 கட்சிகளின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என முக்கியஸ்தர்களின் சந்திப்பு நடைபெற்றது. மேலும் 2024 தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3வது கூட்டணியை உருவாக்குவதற்கான அடித்தளம் அது எனவும் கூறப்பட்டது.

இருப்பினும் மகாராஷ்டிராவில் காங்கிரஸின் கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்குவதில் சரத் பவார் ஈடுபட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read:  ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய ஆதிமனித இனம் கண்டுபிடிப்பு - இஸ்ரேல் ஆய்வாளர்கள் தகவல்!

இந்நிலையில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியா அல்லது பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியா? எதை நோக்கி எதிர்கட்சிகள் பயணம் செய்கின்றன என்பது குறித்து சரத்பவாரிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது பேசிய சரத்பவார், பாஜகவுக்கு எதிரான எந்த அணியும் காங்கிரஸ் இல்லாமல் அமைய முடியாது.

பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் அப்படி ஒரு அணி ஏற்படுத்தப்படும் என்றால் அதில் காங்கிரஸ் நிச்சயம் சேர்க்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தவொரு அணியும் கருதப்பட்டால் "கூட்டு தலைமை" ஏற்படுத்தப்படும் என சரத் பவார் தெரிவித்தார்.
Published by:Arun
First published: