Home /News /national /

அரசியல் ஆதாயத்துக்காக மேகதாது பாதயாத்திரை - காங்கிரஸ் கட்சியை விளாசும் கர்நாடக முதல்வர்

அரசியல் ஆதாயத்துக்காக மேகதாது பாதயாத்திரை - காங்கிரஸ் கட்சியை விளாசும் கர்நாடக முதல்வர்

DK Shivakumar

DK Shivakumar

Mekedatu Dam Row: அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றும் வகையில் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 • News18 India
 • 2 minute read
 • Last Updated :
  மேகதாதுவில் புதிதாக அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டிருப்பது அரசியல் ஆதாயத்துக்காக மக்களை ஏமாற்றும் செயல் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

  கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்ட நிலையில் இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாது அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான கர்நாடக அரசு விரைவில் மேகதாது அணை கட்ட வேண்டுமென வலியுறுத்தி மேகதாதுவில் இருந்து பெங்களூருவுக்கு 11 நாட்கள் பாதயாத்திரை தொடங்கியுள்ளது.

  இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடைபயணம் தொடங்கினர். இருப்பினும் சித்தராமையாவுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டதால் அவர் பாதியில் கிளம்பிச் சென்றார்.

  Also read:   பாறை சரிந்து படகில் சென்ற சுற்றுலா பயணிகள் மீது விழுந்த கோர சம்பவம் - 10 பேர் பலி

  இதனிடையே கர்நாடகாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ள பாதயாத்திரை நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி விதிகளை மீறி மேற்கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கஜ்ரோல் எச்சரித்துள்ளார்.

  இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையானது அரசியல் யாத்திரை எனவும் அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றும் வகையில் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்துள்ளார்.

  Also read:  ஓமைக்ரான் ஓர் இயற்கையான தடுப்பூசி: வல்லுனர்களின் நம்பிக்கையா? அபாயகரமான கருத்தா?

  மேகதாது விவகாரத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக நடந்து கொள்வதற்கு பதிலாக, காங்கிரஸ் இதுபோல செயல்படுவதாகவும் ஆனால் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்தார் பசவராஜ் பொம்மை.

  “முந்தைய காங்கிரஸ் அரசு, தனது 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் மேகதாது அணை திட்டம் தொடர்பாக முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க தவறியது. இத்தனைக்கும் தற்போது போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் டி.கே.சிவக்குமார் தான் அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர், ஆனால் அவர் உறுதியான நடவடிக்கை எதையும் மேகதாது விவகாரத்தில் எடுக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் இந்த விவகாரத்திற்காக அக்கட்சி குரல் எழுப்பவில்லை.

  Also read: இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்... வல்லுனர்கள் கணிப்பு

  ஆனால் இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் ஆதாயத்துக்காக பாதயாத்திரையை தொடங்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆட்சியில் இருந்த காலத்தில் திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு அவர்களை வாட்டுகிறது. எனவே அவர்கள் மக்களை முட்டாளாக்குகிறார்கள்.  இது ஒரு அரசியல் பாதயாத்திரை.

  அதே நேரத்தில் மேகதாது விவகாரத்தில் சட்டரீதியிலான போராட்டத்தை பாஜக அரசு கையில் எடுத்திருக்கிறது.” என பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.  கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நேற்றைய மேகதாது பாதயாத்திரையில் டி.கே.சிவக்குமார் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளதுடன், அந்த வீடியோவில் பேசமுடியாமல் அவர் இருமுவதை குறிப்பிட்டு, டி.கே.சிவக்குமாருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை போல தெரிகிறது, அவர் மாஸ்க் அணியாமல் தொண்டர்களிடையே பேசுகிறார். அவர் கொரோனா பாதிப்புகளை அதிகரிப்பதில் முனைப்பாக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பியிருக்கிறது.
  Published by:Arun
  First published:

  Tags: Congress, Mekedatu, Mekedatu dam

  அடுத்த செய்தி